Tuesday, April 2, 2019

Monday, March 25, 2019


கண் கொள்ளா காட்சி - Happy puberty Day - என்னுடைய முதல் ஆல்பம்

tamil love song album- thapoosankar-guru kalyan-durga



எனது முதல் short film

NAAN ROJA PESUGIREAN/TAMIL SHORT FILM/THAPOO SANKAR/GURU KALYAAN/MUBASHIR/DURGA


காதலைச் சொல்வதற்காக ஒரு ஆண்,ஒரு பெண்ணிடம் தருகின்ற ரோஜா மலர், தன் கதையை சொல்கிறது.

https://www.youtube.com/watch?v=JiXcOgltxhQ

Thursday, December 11, 2014

'தோழன் தோழி' எனது புதிய நூல்.
புத்தக காட்சி வெளியீடு.
கற்பகம் புத்தகாலயம். 044-24314347

Friday, February 25, 2011

தேவதைகளின் தேவதை.




தேவதைகளின் தேவதை.
***********************
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும்
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல
நீ ஒவ்வொரு முறையும்
சரிசெய்கிறாய்
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.

Monday, February 14, 2011

காதலர் தின வாழ்த்துக்கள்


Tuesday, December 21, 2010

எனக்கு இரண்டு காதலிகள்



ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்

இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
.................................................

உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்

அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................................

அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்

உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
.................................................

உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக

அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
.................................................

நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்
.................................................