Friday, February 25, 2011

தேவதைகளின் தேவதை.




தேவதைகளின் தேவதை.
***********************
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும்
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல
நீ ஒவ்வொரு முறையும்
சரிசெய்கிறாய்
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.

67 comments:

  1. காதலிக்கவைக்கும் கவிதைகள்..!!

    ReplyDelete
  2. எதற்காக
    நீ கஷ்டப்பட்டுக்
    கோலம் போடுகிறாய்.
    பேசாமல்
    வாசலிலேயே
    சிறுது நேரம் உட்கார்ந்திரு
    போதும்.
    ARUMAYANA VARIKAL.......

    ReplyDelete
  3. ஹய்யோடா..

    ஏற்கனவே படிசிருந்தாலும் இப்ப படிக்கும்போது புதுசா படிக்கிற மாதிரியே இருக்கு.

    ReplyDelete
  4. அய்யோ.. நான் ரசித்து படித்த கவிதைகள் அனைத்தும்..

    ReplyDelete
  5. //நீ யாருக்கோ செய்த
    மௌன அஞ்சலியைப்
    பார்த்ததும்.....
    எனக்கும்
    செத்துவிடத் தோன்றியது.//

    அருமை அருமை தபு....

    ReplyDelete
  6. படிக்க படிக்க தகட்டாத கவிதைகள் உங்கள் கவிதை மக்கா...

    ReplyDelete
  7. திரும்பத் திரும்ப
    படிச்சாலும் கண்களை
    விரும்ப விரும்ப
    களவாடுது கவிதைகள்...

    ReplyDelete
  8. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள் ...
    மனது பறக்கிறது படிக்கும்போது

    ReplyDelete
  9. தலைவரே ...நீங்க தமிழ் பதிவு உலகத்தில் வாழ்கிறீர்களா ...?
    உங்களுடைய ஏறக்குறைய அனைத்து கவிதை புத்தகத்தையும் படித்து உள்ளேன் ....
    காதல் கவிதை மன்னனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அட! இதெப்பிடி படிக்காம விட்டேன்?

    ReplyDelete
  11. இன்றுதான் வந்தேன். . . எளிமையாய் திருடிவிட்டீர்களே என் மனதை கவிதைகள் மூலம்! ரசித்தேன் ! ருசி(த்) தேன் !

    ReplyDelete
  12. can you write sad poets for me sir? love failure boys thaan niraiya per irukom so plzzzzzzzzzz engalukaga oru book

    ReplyDelete
  13. அனைத்துக் கவிதைகளும் காதல் சொட்டுகின்றன!!

    வருகை தாருங்கள் நந்தலாலா இணைய இதழுக்கு!!

    ReplyDelete
  14. அருமையான காதல் கவிதைகள் சார்..

    ReplyDelete
  15. கவிதைகள் அனைத்தும் அருமை.
    காதல் காதல் காதலோடு..

    ReplyDelete
  16. "நீ யாருக்கோ செய்த
    மௌன அஞ்சலியைப்
    பார்த்ததும்.....
    எனக்கும்
    செத்துவிடத் தோன்றியது. :"

    ஆஹா ! உங்கள் கவிதையை படித்தாலும் நான் பறப்பதை போல உணர்கிறேன்... அருமையான வரிகள்....அனுபவித்து படித்தேன்..ரசித்தேன்....

    ReplyDelete
  17. கவிதைகள் அருமை தபு

    ReplyDelete
  18. பல முறை
    படித்தும்
    திகட்டாமல்
    தித்திக்கிறது
    உங்கள் கவிதைகள்...!!!

    என் கவிதை பக்கங்கள்: http://brahmankavi.blogspot.com/

    ReplyDelete
  19. wow i really loves ur poem

    ReplyDelete
  20. இன்றுதான்..முதல் விஜயம் உங்கள் பிளாக்கிற்க்கு..அதை தொடர் விஜயமாக மாற்றிவிட்டீர்கள்...கவிதைகள் அனைத்து மிக அருமை...ரசித்து படித்தேன்...வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  21. Kavidhaigal arumai.Happen to visit ur blog today. I have been reading all your poems from my college days and collected all your books upto recent editions. Whenever i visit india, i look for your kavidhai books at bookland,chennai. Ur poem in ananda vikatan , Feb issue was real superb. So happy to visit ur blog posts....Awesome...

    Sathya
    From Taiwan

    ReplyDelete
  22. Please Send Your Fonts To ME
    My Email Address -:
    rsanjeeban@hotmail.com

    ReplyDelete
  23. வாழ்த்துகள் சங்கர்

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையத்தில் சந்தித்தமை மகிழ்ச்சி தருகின்றது.
    பார்க்கவும்

    http://muelangovan.blogspot.com/

    ReplyDelete
  24. //நீ யாருக்கோ செய்த
    மௌன அஞ்சலியைப்
    பார்த்ததும்.....
    எனக்கும்
    செத்துவிடத் தோன்றியது//

    :))))))))))

    ReplyDelete
  25. http://blogintamil.blogspot.com/

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

    ReplyDelete
  26. thabu sir varthaigal ellai

    kadalikka kattru kondan ungal kavithaikal

    valiyaga

    ReplyDelete
  27. முதல் கவிதை யதார்த்தம்.

    எழுத்துக்களில் அனுபவம் தெரிகிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. கவிதை வரிகள் அனைத்திலும் வசந்தங்கள் வீசுகின்றன... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. kadhal vandhal tan kavidhai varum enbargal anal ungal kavithaiyai padithaley kadhal vandhuvidugiradu...... ennai pondravanaium kavithai eludha thundugiradu ungal varthaigal ungalin paramavisiri....... thangal thiraipadam edukirirgal endru kelvipatten
    kadhal padathiruku thangal tharapogum andhasthai ellorum kondada kathirukurarkal

    ReplyDelete
  30. hats off sir , kathalukku aruthamana oru puthalvan neer than

    ReplyDelete
  31. என்னமோ சொல்றீங்க போங்க .,முடியல :(((((((

    ReplyDelete
  32. கொல்றீங்க சார்

    ReplyDelete
  33. போன கமெண்ட் இக்னோர் பண்ணிடுங்க ..,வேற இடத்துல போட்டது

    ReplyDelete
  34. THABU SIR.. I JUST MELT AWAY IN YOUR POETRY.ITS SIMPLY SUPERB...

    ReplyDelete
  35. SIR NEENGA IDHE MADHIRITE INNUM NERAYA KAVIDHA ELUDHANUM....

    ReplyDelete
  36. Hi, thabu sir..

    I like kadhal kavidhaigal..

    Naanum ezhudhuven,,

    aanal ungala pola illa..

    i ve read ur book.. which has full of love poems...

    but my frnd was having that, now she has gone to singapore.

    Miss ur kavidhai book

    ReplyDelete
  37. THABU SIR.. I JUST MELT AWAY IN YOUR POETRY.ITS SIMPLY SUPERB...//

    nanum urugi poikiren....

    super..

    ReplyDelete
  38. நீ யாருக்கோ செய்த
    மௌன அஞ்சலியைப்
    பார்த்ததும்.....
    எனக்கும்
    செத்துவிடத் தோன்றியது.--- am love it

    ReplyDelete
  39. lighthouse surya salem....October 29, 2011 at 6:15 PM

    அருமையான வரிகள்....அனுபவித்து படித்தேன்..ரசித்தேன்....


    நீ யாருக்கோ செய்த
    மௌன அஞ்சலியைப்
    பார்த்ததும்.....
    எனக்கும்
    செத்துவிடத் தோன்றியது

    ReplyDelete
  40. உன் படத்தை பார்த்தே கவிஞன் ஆனவன் நான். என் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதை சொல்லும் உன்னை நினைக்கும் போது...

    ReplyDelete
  41. இதையெல்லாம் படிக்கும் போதுதான், காதலற்றவனக்கும் காதலிக்க தோன்றுகிறது....

    ReplyDelete
  42. ungalaip paarthu thaan.. nane kavithai ezhua aarambithen... rishvan.

    ReplyDelete
  43. வரிகளை வர்ணிக்க என்னிடம் வரிகள் இல்லை..

    இங்குள்ள அத்தனை பதிவையும் படித்துப் போகிறேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்

    ReplyDelete
  44. ungal kavithai galai padithu naanum kaadalika aasai padukiran

    ReplyDelete
  45. இணையத்தில் உங்கள் தளத்தை இத்தனை நாள் பாக்காம போயிட்‌டனே... தொடர்கிறேன்! கவிதைகள் (வழக்கம் போல்) மிக அருமை.

    ReplyDelete
  46. ஓஓஓ என் தோழிகள் அடிக்கடி கூறுவார்கள் தபூ சங்கரின் கவிதைகளை காப்பி அடிச்சுதான் காதலிக்கிறவங்களுக்கு காட்டனும் என்று இன்று இணையத்தில் உங்கள் பக்கத்தை பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை.. மகிழ்ச்சி அண்ணா தொடர்கிறேன். உங்கள் கவிதைக்கு நான் வாழ்த்து கூற தேவயில்லை என நினைக்கிறேன் இருந்தாலும் ரசிகையாக என் கடமை இழகான கவி அண்ணா

    ReplyDelete
  47. அழகிய கவிதைகள்.......................

    ReplyDelete
  48. vijaya pathipaakam veliyitta ungal puththakaththai padiththirindhaalum blog l padippathu mika arumai,
    photo kkalum jaadikkeeththa moodi pol pesaamal pesukinrana

    ReplyDelete
  49. vanakam ayya thangalin theevira rasigargal nerya per ungalai contact pana soli ketrukanga so enathu mail id harshavijay001@gmail.com pls contact me and help us for the small requests from our GLOBETAMILAN site

    http://globetamilan.blogspot.in/

    thanks

    ReplyDelete
  50. Hi all are awesome poems and really lovable. please update weely.

    ReplyDelete
  51. எதற்காக
    நீ கஷ்டப்பட்டுக்
    கோலம் போடுகிறாய்.
    பேசாமல்
    வாசலிலேயே
    சிறுது நேரம் உட்கார்ந்திரு
    போதும்.

    அழகிய கற்பனை அருமை!...

    ReplyDelete
  52. வணக்கம்
    அருமையான கற்பனை...
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்

    ReplyDelete
  53. போதும் நிறுத்துங்கள் உங்கல் கவிதையை ,எனக்கு காதல் இன்னும் அதிகமாகிறது அவல் மீது.நன்றி சங்கர்

    ReplyDelete
  54. நன்றாக இருந்தது

    ReplyDelete
  55. தங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போதுதான் முதல் முறை உங்கள் கவிதையை படித்தேன்.......... மிகவும் எளிய நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருக்கிறது. சிறப்பு!.

    ReplyDelete
  56. நீ யாருக்கோ செய்த
    மௌன அஞ்சலியைப்
    பார்த்ததும்.....
    எனக்கும்
    செத்துவிடத் தோன்றியது

    அருமை அருமை
    வாழ்த்துக்கள்///

    ReplyDelete
  57. AVALODU MATTUME SANTHOSAMAGA VAVAZHA NINAITHEN.........
    ANAL IPPOTHO AVALODUM VAZHNTHEN ENBATHAI NINAITHU SANTHOSAPPATTU KONDEN......UNGAL VARIGALIN VADIVANGALAL......
    MN [E] M.NAMBUTHIRIPAT

    ReplyDelete
  58. உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை கவிஞரே! இது எனது வலைத்தளம் :)
    mayiliragukal.blogspot.com

    ReplyDelete