Saturday, October 9, 2010

என்னுரை ( என் எல்லாப் புத்தகங்களுக்கும்)


ன் கவிதைகளில் இருக்கிற அளவுக்கு சுவாரசியம் என் காதலில் இருக்குமா என்பது தெரியவில்லை.

ஊரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை காதலுக்கும் எனக்கும் இருந்த ஒரே சம்பந்தம்... எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு காதல் கடிதம் எழுதிக்கொடுத்ததுதான்.

என் கையெழுத்து கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால்... பலமுறை பெயிலாகிப் பெயிலாகி என்னுடன் படித்த பெரியண்ணன் ஒருவன் என்னை எழுதித் தரச் சொன்னதால், அவன் சொல்லச் சொல்ல எழுதித் தந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து, நான் பட்டப் படிப்புக்காக காந்திகிராமம் சென்றபோது... அங்கே காதல் தன் முழுப் பரிவாரங்களோடு காத்திருந்தது, என்னை ஆட்கொள்ள.

அவள் அழகி இல்லை; பேரழகியும் இல்லை; அதற்கும் மேல். ஒருத்தியை ஒருவன் காதலிக்கலாம்; அல்லது இருவர் காதலிக்கலாம். ஆனால் ஒரு கல்லூரியே காதலிக்குமா? காதலித்தது அவளை. ஆனால் அவளோ எல்லோரையும் தூசி மாதிரி பார்த்தாள்.

இத்தனைக்கும்... நான் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த போது அவள் படித்துக்கொண்டிருந்ததோ, பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு. அவள் அம்மா எங்கள் கல்லூரியில் பணியில் இருந்ததால் அவள் வீடு கல்லூரிக்குள் இருந்தது.

மாலை நேரங்களில் எங்கள் கல்லூரி மைதானத்தில் தான் தன் தோழிகளோடு அவள் கைப்பந்து விளையாடுவாள். அப்போதெல்லாம் எந்தப் பையனாவது அவளிடம் பேச முயற்சித்தால் திட்டி அனுப்பி விடுவாள்.
ஆனாலும் அவளிடம் பேசுகிற பாக்கியத்தை ஒருவன் பெற்றிருந்தான். அவன் பெண்களின் ஊழியன். எந்தப் பெண் எது சொன்னாலும் உடனே கடைக்குப் போய் வாங்கி வருபவன்.

அவன் அவளிடம் பேச ஆரம்பித்ததை நினைத்து யாருமே வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியே அடைந்தனர். அவன்மூலம் அவளிடம் தங்கள் காதலைத் தெரியப் படுத்திவிடலாம் என்று நினைத்து.
அவள் விளையாடிவிட்டுப் போனதும், அவனை அழைத்து நடுவே உட்காரவைத்து `எங்களில் யார் பேராவது அவளுக்குத் தெரியுமா?' என்று கேட்பார்கள்.

`எனக்குத் தெரியாது' என்பான் அவன்.
`நீ கேட்க வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிக் கேக்கறது' என்பான்.
`சரி... நீ சொல்ல வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிச் சொல்றது?' என்பான்.

எல்லோரும் மௌனமாகிவிடுவார்கள். நானும் அந்தக் கூட்டத்தில்தான் இருப்பேன் என்றாலும், என்னை இந்த விஷயத்தில் என் நண்பர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஏனென்றால் நான் அவளைப் பற்றி ஒரு வார்த்தைகூட ஒருபோதும் பேசுவதில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை என்பதுபோல் இருப்பேன். ஆனாலும் அந்தக் கூட்டத்தில் இருப்பேன்... மௌனமாய் அவளைப் பார்த்தபடி...

கல்லூரிக்குள் இருக்கும் மளிகைக்கடையில் நான் ஏதாவது வாங்க நிற்கும்போது அவள் வந்தால், நான் ஒதுங்கிக் கொள்வேன். மற்ற நண்பர்களோ பக்கத்திலேயே நின்று வழிந்துகொண்டிருப்பார்கள்.

அவள் ஓர் அழகான சிவப்புச் சைக்கிள் வைத்திருந்தாள். கடைத் தெருவுக்குப் போவதற்காக விடுதிப் பெண்கள் கேட்டால் மட்டும் அதைத் தருவாள். அதற்கு வசதியாக அவள் விளையாடும் போது சாவியை ஊழியன் கையில் கொடுத்து விடுவாள். அவனிடமிருந்து பெண்கள் வாங்கிப் போய், திரும்ப வந்து கொடுப்பார்கள்.

அப்படித்தான் அன்றும் யாரோ ஒருத்தி அவனிடம் சாவி வாங்கிக் கொண்டு எங்கோ போய்த் திரும்பி வருகையில் அவன் இல்லாததால், அந்தப் பெண் சாவியை யாரிடமோ கொடுத்துவிட்டாள். அது அவள் கைக்குப் போய்ச் சேராததால், சாவி தொலைந்துவிட்டதாக எண்ணித் தேடிக் கொண்டிருந்தாள்.
இது தெரிந்து எங்கள் கூட்டம் அந்த மைதானத்தையே சலிக்க ஆரம்பித்துவிட்டது. சாவியைக் கண்டுபிடித்து அவள் இதயத்தில் இடம் பிடித்து விடலாம் என்கிற ஆசையில்... எங்கோ போயிருந்த ஊழியன் திரும்பி வந்து தேட ஆரம்பித்து... சாவியைக் கண்டுபிடித்தான். இந்தக் களேபரங்கள் எல்லாவற்றையும் மைதானத்தின் ஒரு மூலையில் அமர்ந்தபடி நான் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மௌனமெல்லாம் தொலையப் போகிறது என்பது தெரியாமல்.
எல்லாம் முடிந்தபிறகு, ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடி என்னருகில் வந்த பெண்களின் ஊழியன், `டேய் ஒரு விஷயம் தெரியுமா... சாவியைத் தேடும்போது... சங்கர்கிட்ட இருக்கான்னு கேளுன்னு அவள் சொன்னாடா' என்றான்.

அவ்வளவுதான்... என் இதயத்தில் காதல் வெடித்துப் பூத்துவிட்டது. என் பெயர் அவளுக்குத் தெரியுமா? சாவி என்னிடம் இருக்கும் என்று அவள் நினைத்திருக்கிறாள் என்றால், நான் அதை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டி ருக்கிறேன் என்று அவள் நினைத்திருக்கிறாளா  என்று எனக்குள் எண்ணற்ற கேள்விகள் முட்டி மோதும்போது ``டேய் அவளுக்கு உன்னைத் தெரிஞ்சிருக்குடா'' என்றான் அவன். எப்படிடா என்று கேட்கத் துடித்தேன் நான். ஆனால் கேட்காமல் நின்றேன். அதுதான் நான்.

நெஞ்சில் தீப்பற்றிக்கொண்டது. உடலெங்கும் பரவசம் பரவியது. இரவு வந்தது தெரியாமல் அந்த மைதானத்திலேயே அமர்ந்திருந்தேன். கடைசியில் காதல் என்னையும் ஆசிர்வதித்துவிட்டது. ரசனைகள் பூத்தன. கவிதைகள் பிறந்தன.
ஆனால்... கடைசிவரை அவளிடம் என் காதலைச் சொல்லவே இல்லை. இதற்குமுன் காதலைச் சொல்லப்போன என் நண்பர்களிடம் அவள் நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் நடந்துகொள்வாளோ என்கிற தயக்கம். அதிலேயே ஓடிவிட்டன மூன்று வருடங்கள். அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

ஆனால்... ஆனால்... அவளால் எனக்குள் பதியமிடப்பட்ட காதல் என்னை விடவில்லை. பதினாறு வருடங்கள் ஆனபிறகும். தினம் ஒரு கவிதையை... தினம் ஒரு காட்சியை... கனவாக... கற்பனையாக எனக்குள் பூக்கவைத்துக் கொண்டே இருக்கிறது காதல்.

அன்று என் இதயத்தில் நுழைந்தவளை... இன்று என் இதயமாகவே மாற்றிவிட்டது காதல்.

என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் அவளைப் பார்க்கக் கற்றுக்கொடுத்து விட்டது காதல். எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்... கடைசியில் என்னையே கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது.

காதல்தான் என் குணம்.
காதல்தான் என் மதம்.
காதல்தான் என் புகழ்.

ஆம்...
என் எல்லாப் புகழும்
காதலுக்கே!

தபூ சங்கர்
---------------------------------------

 நூல் கிடைக்குமிடம்...
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.80/- 

42 comments:

 1. நல்ல மொழி நடை ..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Superb சார்..
  வாழ்த்துக்கள்...
  நம்ம பக்கமும் வந்திட்டு போங்க...
  Word Varificationன தூக்கப்புடாதோ..?

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் பாஸ்...

  http://funage16.blogspot.com/

  ReplyDelete
 4. ungaloda ella kavithakalaiyum padusuruken.. manasu fulla kathalthan.... neraya eluthunga...
  kathal devathaiyin kavi magane..
  -kirukkan...

  ReplyDelete
 5. //ஆனால்... கடைசிவரை அவளிடம் என் காதலைச் சொல்லவே இல்லை.//

  சொல்லாமல் சொல்வது தானே காதல் ?
  சொல்லாமல் கொல்லுவது தானே காதல் ?
  சொல்லுவது எல்லாம் காதல் இல்லை !!

  ஹா ஹா ...

  ReplyDelete
 6. என் நண்பர்கள் எல்லாம் உங்களுடைய நீண்ட நாள் ரசிகர்களாயிருக்க, நான் பெரிதாக உங்கள் கவிதைகளை படித்ததில்லை இன்று இந்த தளத்தில் இருந்த அனைத்தையும் வாசித்ததை தவிர....

  இந்த பதிவைப் பற்றி:
  "வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன் பாராட்ட...."

  ReplyDelete
 7. After i read your words, my mind wants a girl to celebrate her fantasy........ your words are amazing.........

  ReplyDelete
 8. thts so kewl.....
  yepdi feelings ah kotrathune theriala......

  ReplyDelete
 9. உங்களை மட்டும் அல்ல, எங்களையும் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது - உங்கள் கவிதைகள்!!

  ReplyDelete
 10. உங்களை மட்டும் அல்ல, எங்களையும் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது - உங்கள் கவிதைகள்!!

  ReplyDelete
 11. hai sankar
  i want to read all ur books......i dont know how to get. intha book pdf format kedaikumaa.
  iam not in india.....

  ReplyDelete
  Replies
  1. நூல் கிடைக்குமிடம்...
   விஜயா பதிப்பகம்
   20 , ராஜ வீதி, கோயம்புத்தூர்
   பேச... 0422-2394614, 2382614

   Delete
 12. Mr.Thabusankar..
  I m LIBIN. I started reading ur book by 2004(My college 1st year).I can never forget the first book i read,"Mazhaiyaanaval". although i m a malayalee, ur writings,especially about "Tajmahal" in mazhaiyaanaval was heart touching.The finishing,that "i sud be that guard of tajmahal"..Really great..Then second i read ur "Enathu karuppu petti".After that i could not remember the books i read, because i was searching for your books and have read all the 1st 13 books listed in this blog in 4 years of my college life.Ur writings are truly amazing..now i am a software engineer in bangalore,but even then i used to search for ur books whenever i go outing.aftee reading this blog i am searching for your remaining 3 books i ve not read. Even some months back, i heard that u re about to direct a film named"Vetkathai kettal enna tharuvai..".I s so happy that i informed this to all my frenz. Now happy to see that i have 3 more books to be read. Wishing you all success!!

  ReplyDelete
 13. U r lucky boss.........

  ReplyDelete
 14. sir, ur kathaiya padicha enakku alugai varuthu,,,naan aluthu romba naal aachu,,,,super sir
  இந்த கல் இதயத்தில் இருந்தும்
  கண்ணீர் வர வைழைத்து விட்டிர்களே,, ,,
  By A.MOHAMED BASITH(WWW.BASITH619.BLOGSPOT.COM)

  ReplyDelete
 15. என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் அவளைப் பார்க்கக் கற்றுக்கொடுத்து விட்டது காதல். எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்... கடைசியில் என்னையே கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது. Beautiful lines... superb .....

  ReplyDelete
 16. உங்கள் காதல் வென்றுவிட்டது
  இல்லை இல்லை
  காதலால் வென்றது நீங்கள்தன்....

  ஒருவேளை நானும் காதலை சொல்லாமல் இருந்திருந்தால்
  நல்ல கவிஞனாகி இருப்பேனோ?

  உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லும்
  வயது, திறமை எனக்கு இல்லை

  அதனால்
  நீங்கள் வாழ்த்துக்கள் சொலுங்கள்
  சொல்லிவிட்டு காத்திருக்கும் என் காதலுக்கு

  ஜாதி மதம் ஓரம் தள்ளி
  வென்றுவிட்டு போகட்டும்
  உங்களை போல.

  -சையது ஹசேன்

  ReplyDelete
  Replies
  1. For More thabu Shankar kavithaigal Follow us In Below FB Link for daily new Updates :

   https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

   Delete
 17. வணக்கம் தபு சார்.. நா முதன் முதலில் படித்து உங்க கவிதை புத்தகம்தான்(இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
  காதல் பிறந்திருக்கிறது)... அப்போ எனக்கு கவிதைகளில் ஆர்வம் இல்லை... அதன் பிறகு உங்கள் புத்தகங்களை (விழியீர்ப்பு விசை,எனது கறுப்புப் பெட்டிஅடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.) வங்கி படித்தேன் அதன் பிறகு நான் உங்கள் புத்தகங்களை வாங்கி படிக்கவில்லை.. அனாலும் இனைய தளத்தில்... உங்கள் கவிதைகளை தேடாத நாட்கள் இல்லை... நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் உங்கள் தளத்தை கண்டறிந்தேன்.. நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை.. உங்கள் தளத்தை கண்டுபிடித்த சந்தோசத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை முழுவதும் படித்துவிட்டு எனது கருத்துகளை நான் பதிவு செய்கிறேன்.. நீங்க இது மாதிரி நறைய புக் எழுதணும் சார்... நன்றி

  ReplyDelete
 18. வணக்கம் தபு சார்.. நா முதன் முதலில் படித்து உங்க கவிதை புத்தகம்தான்(இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்
  காதல் பிறந்திருக்கிறது)... அப்போ எனக்கு கவிதைகளில் ஆர்வம் இல்லை... அதன் பிறகு உங்கள் புத்தகங்களை (விழியீர்ப்பு விசை,எனது கறுப்புப் பெட்டிஅடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.) வங்கி படித்தேன் அதன் பிறகு நான் உங்கள் புத்தகங்களை வாங்கி படிக்கவில்லை.. அனாலும் இனைய தளத்தில்... உங்கள் கவிதைகளை தேடாத நாட்கள் இல்லை... நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் உங்கள் தளத்தை கண்டறிந்தேன்.. நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை.. உங்கள் தளத்தை கண்டுபிடித்த சந்தோசத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை முழுவதும் படித்துவிட்டு எனது கருத்துகளை நான் பதிவு செய்கிறேன்.. நீங்க இது மாதிரி நறைய புக் எழுதணும் சார்... நன்றி

  ReplyDelete
  Replies
  1. For more Thabu Shankar Golden Lines :
   Follow us in FB For daily updates :

   https://www.facebook.com/pages/Thabu-shankar-Fan-Club/276957659181679

   Delete
 19. தபு சங்கர் அவர்களுக்கு
  கவிஞன் என்று சொல்லுவதில் பெருமை கொள்வதைவிட மகிழ்வு கொள்ளும் ரகம் நான் உங்களின் கவிதைகளை கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற தலைப்பில் காதல் கொண்டு விஜயா பதிப்பகத்தில் உங்கள் காதல் நூலை வாங்கினேன் அதற்குள் இருந்த திருக்குறளை போன்ற காதல் வரிகளை கண்டு உண்மையில் வெட்கப்பட்டுதான் போனேன் . பெண்மையின் உணர்வுகளை மதிப்பவனால் மட்டுமே பெண்ணை வெட்கப்பட வைக்க முடியும் .

  எத்தனை மென்மையான வார்த்தைகளில் வடித்திருகிறீர்கள் உங்கள் வாக்கியங்களை படிக்கும் போது மெய் சிலிர்த்து போனேன் காதலன் எல்லோரும் காவியம் பாட முடியாது காதலை உணர்ந்தவன் மட்டுமே காவியத்திலும் நிஜத்திலும் வாழ்கிறான் நீண்ட நாட்களுக்கு உங்களை பற்றி உங்களிடமே சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்துகொல்கிறேன் மனதில் ஆழம் வரை சென்று விட்டது .

  "சற்றுமுன் நீ நடந்துபோன
  தடயம் எதுவுமின்றி
  அமைதியாய் கிடக்கிறது வீதி
  எனினும்
  அதிவேக ரயிலொன்று
  கடந்துபோன தண்டவாளம் போல
  இன்னும் அதிர்கிறது
  என் இதயம் -

  ஒரு சராசரி மனிதனின் உணர்வுதான் அதை அழகாய் சொல்வதில் நீங்கள் கைதேர்ந்தவர்.

  " உங்கள் காதலுக்கும் என் காதலுக்கும்
  ஒரேஒரு வேறுபாடுதான்.....
  உங்கள் காதலைக் கொண்டு நீங்கள் காதலிக்கிறீர்கள்.
  என் காதலைக் கொண்டு
  எல்லோரையும் காதலிக்க வைக்க
  முயற்சிக்கிறேன்."

  இது எவளவு பெரிய விஷயம் என்னால் உணர முடிகிறது எப்போது சமுதாயத்தை பற்றி ஒரு கவிஞன் நினைகிறானோ அப்போதுதான் அவன் முழுமையடைகிறான் .

  காதல் மட்டுமே
  போர்களத்தை பூங்காவாக மாற்றுகிறது
  காதல் மட்டுமே
  மிருகத்தையும் மனிதனாக்குகிறது
  காதல் மட்டுமே
  உலகில் சாதானத்தை உருவாகுகிறது
  காதலுக்கு மட்டுமே
  சாதி மத பேதமில்ல சமூகத்தை உருவாக்கும் சக்தி இருக்கிறது
  ஆகவே எல்லோரும் காதலிப்போம்

  உங்கள் பயணத்தை எழுத்துடன் எப்போதும் தொடர வாழ்த்துகிறேன்
  உங்களோடு நானும் இணைத்து வர வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி

  இவள்
  கோவை மு. சரளாதேவி
  காதல்

  ReplyDelete
 20. kathalithikondirukum ennai pol palar ungalin padaipugalai rasikamal iruka mattar
  kathalukke kathalin azhagai theriyapaduthi vittergal
  kathalargalin sarbai enathu nanrigal pala

  ReplyDelete
 21. Ungal kavidhai enaku migavum pidiththulladhu... Enaku enna solvadhenre theriyavillai... ungal varigal anaiththum miga arumai...

  ReplyDelete
 22. உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 23. அவள் பெயர் தபு இல்லையே?

  ReplyDelete
 24. உங்கள் கவிதைகளை இணையத்தில் தேடாத நாள் இல்லை. இன்று உங்கள் வலை பதிவை கண்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்கள் கவிதைகளை படித்தால் காதலை வெறுப்பவர்கள் கூட காதலை காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். எளிமையான வரிகள் உணர்வுகளின் ஊற்று. அருமை அருமை அருமை.

  ReplyDelete
 25. nanbare!

  nan inru migavum magizhchiyaga irukkiren ungalai kandu pidithathil.
  nan ungal kavithai rasigai.ungal kaadhal kavinjarakki irukkirathu, ithanal pala kadhal valargirathu, vazhkirathu thinamum, ennai polave palar manamun santhosam adaikirathu. ungalin amaidhiyana kadhal enaku pidichichruku. en kadhalaruku ungal SELAIYORA POONGA book gift pannen release ana pothu. inrum varigal manathirku santhosam tharugirathu. i need all of ur book collections. ur printnig book style is also loveable.

  ReplyDelete
 26. தினம் ஒரு கவிதையை... தினம் ஒரு காட்சியை... கனவாக... கற்பனையாக எனக்குள் பூக்கவைத்துக் கொண்டே இருக்கிறது காதல்.

  எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்..

  ReplyDelete
 27. தினம் ஒரு காட்சியை... கனவாக... கற்பனையாக எனக்குள் பூக்கவைத்துக் கொண்டே இருக்கிறது காதல்.
  எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்...

  ReplyDelete
 28. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  மேன்மேலும் நீங்கள் உங்கள் கவிதைகளால் சிறப்புற வேண்டும்.

  ஜானவி

  ReplyDelete
 29. Romba Nalla iruku sir. unga kavithai a virumbi patipen!!!!!

  ReplyDelete
 30. இது புதிய கதை இல்லை எல்லா முதல் காதலும் இப்படியே துவங்குகிறது
  சின்ன பார்வையில்
  மெல்லிய புன்னகையில்
  ஒற்றை வாத்தையில்
  தொட்டுசென்ற முச்சுகாற்றில் என துவங்கிய காதல் ஆயிரம் அவை
  முடிவதும் இல்லை தொடர்வதும் இல்லை
  அதை விளக்க நம்மிடம் வார்த்தையும் இல்லை
  அவை நமக்கு விளங்குவதும் இல்லை
  எப்போதாவது இது போன்ற வரிகளை வாசிக்கும்போது எட்டிப்பார்க்கிறது என் முதல் காதல் உப்புச்சுவையோடு....


  நன்றி..

  ReplyDelete
 31. eppadi sankar ippadi...mudiayala...innorumurai kadhalikkanumnu aasaiaya irukku sankar..

  ReplyDelete