Saturday, October 9, 2010

அடுத்த தொகுப்பு...
பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது
----------------------------------------------------


ப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே

----------------------------------------------------

த்தனைக் குதிரைசக்தி கொண்டதோ
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும்
உன் குதிரைவால் கூந்தல்

----------------------------------------------------

நீ
சுவெட்டர் போட்டிருப்பது
உனக்குக் குளிராமல் இருக்கவா
இல்லை
ஊருக்குக் குளிராமல் இருக்கவா

----------------------------------------------------

தினந்தோறும்
குழந்தைக்கு ஆடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பும் தாயைப்போல
ஒரு நாளாவது
உனக்கு ஆடை அணிவித்து
கல்லூரிக்கு அனுப்பவேண்டும்

----------------------------------------------------

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

28 comments:

 1. நண்பரே.. இது உங்கள் ப்ளாக் தானா ?..

  நான் உங்கள் கவிதைகளின் ரசிகன்..

  உங்களது கவிதை அனைத்தும் மிகவும் அருமை.

  தொடரட்டும் உங்கள் காதல் கவிதைகள்....

  ReplyDelete
 2. அட்டைப் படத்தை நம் தமிழ்ப் பெண்கள் அலங்கரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
  நன்றி!

  ReplyDelete
 3. ஆனந்த விகடனில் நீங்கள் எழுதிய தேவதைகளின் தேவதை-யை வாரந்தோறும் சிலாகித்து படித்தேன். இனி அடிக்கடி உங்கள் கவிதை மழையில் நனையலாம். நீங்கள் வலைப்பதிவு ஆரம்பித்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா.....

  ReplyDelete
 4. நேற்றய விட இன்னிக்கு டெம்ளேட்டும் ப்ரபைலும் நல்லாருக்கு சார்..
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. கவிதைகள் கொட்டும் காதலில் ஆனால், காதல் கொட்டுகிறது உன் கவிதையில்...

  ReplyDelete
 6. hayyooo.... tabooo wel come to bloge world..

  ReplyDelete
 7. hi thboo sir welcome tobloge world

  unga kavithai padichi padichi thanga engaluke kavithai ezuthura asai vanthuchi

  http://pirivaiumnesippaval.blogspot.com/

  ReplyDelete
 8. காதல் ரசத்தை பொழியும் உங்கள் கவிதைகளின் ரசிகன் நான். உங்களோடு பாலோவர் ஆனதில் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 9. //ஒரு நாளாவது
  உனக்கு ஆடை அணிவித்து
  கல்லூரிக்கு அனுப்பவேண்டும்///

  அசத்தல்........
  ஆனா எதுக்கும் அவள் அண்ணன்கிட்டே ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள்....

  ReplyDelete
 10. காதலை கூட காதலிக்க வைத்து விடும் உங்கள் கவிதைகள்...மீது தீரா அன்பு எனக்கு..!!!
  மேலும் தொடரும் உங்கள் கவிதைகளை காண காத்திருக்கிறது என் கண்களும் என் கனிணியும்..!!!
  வாழ்த்துக்கள் நண்பரே...!!!

  ReplyDelete
 11. இம்முறை உங்களது கவிதைகள் சற்று வித்தியாச மாக இருந்தது . காதல் அல்லாது மற்று மாறு பட்ட தலைப்பில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி . அந்த மாற்றத்துக்காக தனிப் பாராட்டுக்கள் .

  நீலகண்டன்.சி எஸ். பாலக்காடு

  ReplyDelete
 12. hai sir sorry sir sonnal nandraga illai nanban endru sonnal miga nandraga porundhum............. kadhalai nam kadhalikum phodhu matum adhai nesikaamal adhu vittu pirindhalum adhai vida adhigamaai nesika kattru kodudhu ungalin kavidhaigal.........ungalin kavidhaigalinaal uyir vaalum innoru uyir...........santhiya

  ReplyDelete
 13. HAI SIR
  UNGAL KAVITHAIYAI PADITHUTHAN
  NAN KATHALIKKAVEA KATRUKKONDEAN
  ENAKKUM ERANDU KATHAL
  ONDRU UNGAL KAVITHAI
  MATRONRU EN KATHALI...
  BY SATHISH KUMAR VADAMZHAI MANAKKADU ( NAGAI)

  ReplyDelete
 14. sir,
  Ungal Kavithaikal Ellame very beautiful & Excellent

  ReplyDelete
 15. SIR ENNA SOLVATHU ENDRU THERIYA VILLAI. UNUGAL ELLA KAVITHAIUM SUPER .
  தொடரட்டும் உங்கள் காதல் கவிதைகள்....
  வாழ்த்துக்கள் நண்பரே...!!!

  ReplyDelete
 16. really super............

  ReplyDelete
 17. epti sir iptilam eluthutharinga girls lv fails pathi eluthungalen pls

  ReplyDelete
 18. உங்கள் வலைப்பக்கமே ஆயிரம் கவிதைகள் சொல்லுது நண்பா.....!

  ReplyDelete
 19. நான் போகும் சாலையில் கொட்டிக் கிடக்கும்
  காதல் பூக்களை ரசிக்க வைத்த கவிஞன், நீங்கள்...!

  "நான் காகிதம்.
  நீ கவிதை.
  நான் இருக்கும் வரை
  உன்னை பத்திரமாய் வைத்திருப்பேன்"

  1 . வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்.
  2 . விழியீர்ப்பு விசை.
  3 . திமிருக்கும் அழகென்று பெயர்.
  4 . எனது கருப்புப் பெட்டி.
  5. மழையானவள்.
  6 . அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி மீ .
  7. உன் பேச்சுக் கா...தல்.
  8. காதல் ஆத்திச் சூடி.

  இன்னும் 8 தலைப்புகள் பாக்கி, அதையும்
  வாங்க வேண்டும் :)

  ReplyDelete
 20. நான் போகும் சாலையில் கொட்டிக் கிடக்கும்
  காதல் பூக்களை ரசிக்க வைத்த கவிஞன், நீங்கள்...!

  "நான் காகிதம்.
  நீ கவிதை.
  நான் இருக்கும் வரை
  உன்னை பத்திரமாய் வைத்திருப்பேன்"

  1 . வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்.
  2 . விழியீர்ப்பு விசை.
  3 . திமிருக்கும் அழகென்று பெயர்.
  4 . எனது கருப்புப் பெட்டி.
  5. மழையானவள்.
  6 . அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி மீ .
  7. உன் பேச்சுக் கா...தல்.
  8. காதல் ஆத்திச் சூடி.

  இன்னும் 8 தலைப்புகள் பாக்கி, அதையும்
  வாங்க வேண்டும் :)

  ReplyDelete