Monday, October 11, 2010

காதல் ஆத்திச்சூடி


வளிடம் மயங்கு
..............................................
னக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள்.
அவளை நீ தேடாதே.

தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள்.

உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள்.

அவ்வளவுதான்... உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய்.

அதன்பிறகு... வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல்.
வாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும் உன் மனம்.

யாரிடமும் பேசாமல், யார் குரலும் கேட்காமல் திரியும் உன் உடலைக் கண்ட உன் நண்பர்கள் உனக்கு என்ன ஆயிற்று என்று அலசி ஆராய்ந்து, அவள் வீதியில் கிடக்கும் உன் மனத்தைக் கண்டெடுத்து வந்து உன் உடலிடம் கொடுப்பார்கள்.

அது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்த உன் மனதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவள் வீடிருக்கும் வீதியில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வருவதுதான்.

நண்பர்கள் திட்டுவார்கள். திட்டிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கும் காதல் வரும்.

- தொடரும்...

 

18 comments:

 1. விகடன்ல படிச்சது முதல் இத நிறைய தடவை Google'la தேடியிருக்கேன் சார்...
  அப்புறம் இதோட E-book download link கிடைச்சிது..
  உங்க ப்ளாக்லயே பர்க்கறது ரெம்ப மதகிழச்சி..
  இஆத போல நெறய்ய எழுதுங்க..

  ReplyDelete
 2. காதல் பற்றி சொல்லி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . வார்த்தைகளில் வசிகரிக்கும் புதுமை கசிகிறது . பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 3. nice lyrics friend
  more lyrices
  go here
  thank u
  http://funage16.blogspot.com/

  ReplyDelete
 4. எத்தனைபேரையோ கவிஞனாக்கியிருக்கின்றீர்கள் - ஆனால்
  அத்தனைபேரையும் காதலனாக்கியிருக்கின்றீர்கள்
  - - ரசிகவ் ஞானியார்

  ReplyDelete
 5. கள்ளி கட்டில் பிறந்த தாயே !
  என்னை கல்லோடிச்சி வளர்த்த நீயே !
  முல்லுகாட்டில் முளைச்ச நீயே
  என்ன முள்ளு தைக்க விடல நீயே !
  - வைரமுத்துவின் வரிகள் ...மீண்டு ஒரு அம்மாவை பற்றிய பாடல்..
  எந்த சூழலில் வளர்ந்த மனிதனாக இருந்தாலும் ஒரு துளி கண்ணீர் நிச்சயம்
  படம் : தென்மேற்கு பருவக் காற்று...
  இந்த பாடலை கேட்க அல்லது பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை அழுத்தவும்
  http://onlinetamilsongs.blogspot.com/2010/10/thenmerku-paruvakatru-songs-download.html

  ReplyDelete
 6. kathal devathaiyin chella magane.. en nenjam ennidam illai.

  ReplyDelete
 7. தபூ சங்கர் அண்ணா நானும் உங்கள் ஊர்க்காரன் என்பதில் பெருமாய் இருக்கிறது எனக்கு.. நானும் உங்கள் புத்தகங்கள் படித்தே கவிதை எழுத தொடங்கிவிட்டேன்.. உங்களின் திரைப்படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

  ReplyDelete
 8. ungal kavidhaigalil khadhal eerppu visai ........boomiyin puviyeerppu visaiyaiyum vinjidum sir.........

  ReplyDelete
 9. மௌனமாக இருக்கும் சில நிமிடங்களைக் கூட மொழி பெயர்த்து விடுகிறது உங்கள் கவிதை வரிகள்..!!!
  உங்கள் வரிகளை படிக்கும் போதே.. மனதின் உணர்வுகள் கூட அன்போடு அடைக்களம் ஆகிவிடுகிறது..
  பகிர்விற்க்கு மிக்க நன்றி தோழரே....

  ReplyDelete
 10. excellent collection thanks for posting...


  Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika

  ReplyDelete
 11. kadhal ungalai therntheduthatha ellai kadhalai neegal thertheduthergala theriya villai.....
  aanal kadhal ungalai than kolkai parapu seyalalarai agkii erukenathu.

  ReplyDelete
 12. தபு அவர்களே, ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும் எனது உயிர் வரை சென்று உள்ளத்த உலுக்கி எடுக்கிறது.. காதலாகி கசிந்துருகி என்பதை உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது உணரமுடிகின்றது. இன்னொரு முறை காதலிக்கலாமா என்று கூடத்தோன்றுகிறது. என் முதல் காதலின்போது உங்கள் கவிதைகள் வெளிவந்திருக்கவில்லை. துணைவியின் மீது உள்ளத்தில் தூங்கிக்கிடந்த காதலை தட்டியெழுப்பி துடிக்க வைத்திருப்பது உங்கள் கவிதைகளே...

  ReplyDelete
 13. kavithai alagu ,moli arindhavan velipaduthalum alagu.

  ReplyDelete
 14. உங்கள் கவிதைகள், என் மருந்துகள்.

  ReplyDelete
 15. கருப்புத் தமிழன்March 13, 2014 at 12:17 PM

  என் காதலுக்கு ஒரு புதகம் படைத்த உஙகள் கதலுக்கு என் காதல்-களந்த நன்றி,,,,

  ReplyDelete